நவம்பர் 30
"ஓகி" புயல் காரணமாகக் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று அதிகாலை தீவிரமாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக வலுவடைந்தது. இன்று காலை 8.30 குமரிக் கடல் பகுதியில், கன்னியாகுமரியில் இருந்து 70 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. வங்கதேசம் தந்த ஓகி எனப் பெயரிடப்பட்ட இந்தப் புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து லட்சத்தீவு நோக்கிச் செல்கிறது. இதனால், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்த வரையில், தமிழகம், புதுச்சேரியில் பரவலாக அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டையின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் இடைவெளி விட்டு சில முறை மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் 65கி.மீ., முதல் 75 கி.மீ., வரை பலத்த காற்று வீசக்கூடும். கடல் சீற்றத்துடன் காணப்படும். நெல்லை, ராமநாதபுரம், குமரி மாவட்ட மீனவர்கள் 24 மணி நேரத்திற்குக் கடலுக்குள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.